வீழ்கிறதா வல்லரசு?… எல்லாம் டிரம்ப் செய்த வேலை… 20-லிருந்து 40 டிரில்லியன் டாலருக்கு எகிறிய அமெரிக்க கடன்… அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!

By Gayathri on ஆவணி 21, 2026

Spread the love

உலகளவில் முன்னணிப் பொருளாதார மற்றும் ராணுவ வல்லரசாகத் திகழும் அமெரிக்கா, சர்வதேச மோதல்களில் மத்தியஸ்தம் வகிப்பதிலும், நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது. எனினும், அந்நாட்டின் உலகளாவிய செல்வாக்கிற்கு மத்தியில், அதன் தேசியக் கடன் சுமை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டில் சுமார் 20 ட்ரில்லியன் டாலராக இருந்த மொத்தக் கடன், தற்பொழுது இருமடங்காகப் பெருகி 40 ட்ரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது பெரும் பொருளாதார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய அபரிமிதமான கடன் உயர்வுக்குப் பாதுகாப்பு மற்றும் ராணுவக் கட்டமைப்புக்கான பிரம்மாண்ட செலவினங்கள், முதியோருக்கான சமூகப் பாதுகாப்பு நலத்திட்டங்கள் மற்றும் கடன் தொகைகளுக்கான வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரிப்பது ஆகியவையே முதன்மைக் காரணங்களாக அமைகின்றன. உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தும் அதே வேளையில், அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தி உள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சமநிலைப்படுத்துவது அந்நாட்டிற்கு முன்னுள்ள மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.