மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் சுரேந்திர சிங் சௌத்ரி, அஜ்னார் நதியை சுமார் 8 மாதங்களாகத் தனி நபராகச் சுத்தப்படுத்தி வந்தார். ஆனால், அவர் சுத்தப்படுத்திய நதியில் மீண்டும் மக்கள் குப்பைகளைக் கொட்டி மாசுபடுத்தியதைக் கண்டு அவர் மிகுந்த மனவேதனையடைந்தார். இருப்பினும், தனது முயற்சியைக் கைவிடாமல் அவர் மீண்டும் அந்த நதியைச் சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கினார்.
பொதுமக்கள் ஆற்றில் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுப்பதற்காக, நதிக்கரையில் தனது சொந்தச் செலவில் இரண்டு குப்பைத் தொட்டிகளை அவர் வைத்தார். ஆனால், குப்பைத் தொட்டிகளை வைத்த மறுநாளே அதில் ஒரு குப்பைத் தொட்டியை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிட்டு தபாகி, “மக்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? ” என்றும், பொதுமக்களின் நன்மைக்காக வைக்கப்பட்ட குப்பைத் தொட்டியே திருடப்பட்டு விட்டதே என்றும் வேதனையுடன் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு, காவல்துறையிலும் புகாரளித்துள்ளார்.
https://www.instagram.com/reel/Dei4F0rSqMk/?utm_source=ig_web_button_share_sheet
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிட்டு தபாகியின் இந்த ஆதங்க வீடியோவைப் பார்த்த பல இணையவாதிகள், “சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லாதவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்” என்றும், “பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கவும் நதியை தூய்மையாக வைத்திருக்கவும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…
உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…
தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…
அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…