அடேங்கப்பா…! ஆரம்பத்தில் பணிப்பெண் வேலை..! 2 வருடத்தில் ரூ.780 கோடி சம்பாதித்த இளம்பெண்…. வியப்பில் நெட்டிசன்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 28, 2025

Spread the love

அமெரிக்காவைச் சேர்ந்த 21 வயதுடைய ‘OnlyFans’ மாடலான சோஃபி ரெயின், தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் $95 மில்லியன் (சுமார் ரூ.780 கோடி) சம்பாதித்ததாக X சமூக வலைதளத்தில் (முன்பு ட்விட்டர்) அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜூன் 2023 முதல் நவம்பர் 2025 வரையிலான தனது மொத்த வருமானத்தின் ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் பகிர்ந்து, தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னர் ஒரு பணிப்பெண் வேலையை இழந்தபின்பு ‘OnlyFans’ தளத்தில் அடியெடுத்து வைத்த இவர், தனது முதல் ஆண்டிலேயே $43 மில்லியன் வரை சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது. வறுமையில் வளர்ந்த இவர், தற்போது தனது வருமானத்தின் மூலம் தன் குடும்பம் முழுவதையும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும், ஒரு சிலர் இவ்வளவு பணம் சம்பாதிப்பது குறித்து வியப்புடன், “பல்கலைக்கழகப் படிப்பை முடித்து கடினமாக உழைப்பவர்களை விட இவரால் இவ்வளவு சம்பாதிக்க முடிவது எப்படி?” என்று கேள்வி எழுப்பி விமர்சித்தும் வருகின்றனர்.