தஞ்சை மாவட்டத்தில் தனனை காதலித்து விட்டு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்த அரசுப்பள்ளி ஆசிரியையை குத்திக்கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் குற்றவாளி அஜித்குமார் அளித்த வாக்குமூலத்தில், ஆசிரியை காவ்யாவும், நானும் 13 ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.
ஆனால் சமீபத்தில் காவ்யாவுக்கு அவருடைய உறவுக்கார பையனுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்கள். அது நேற்று முன்தினம் எனக்கு இதுபற்றி தெரியவந்தது. இதனால் காவ்யாவிடம் சென்று நீ என்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் கூறினேன். ஆனால் இதற்கு காவ்யா மறுத்தார். இதனால் கோபத்தில் அவரை குத்தி கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
