“இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம்” பேஸ்புக்கில் ஆபாச உரையாடல்… ஆண்களுக்கு ஆசை வலை விரித்து சிக்கிய இளம்பெண்.!!

By Soundarya on தை 24, 2026

Spread the love

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆண்களை ஏமாற்றிப் பணம் பறித்த நபிலா பேகம் (27) என்பவரைச் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். முகநூல் (Facebook) மூலம் “இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம்” என ஆசைவார்த்தை கூறி, ஆபாச உரையாடல்களில் ஈடுபட்டு ஆண்களைத் தன் வலைக்குள் வீழ்த்தியுள்ளார். இதற்காகத் தனித்தனி கட்டணங்களை நிர்ணயித்து, டிஜிட்டல் முறையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர் மோசடியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், நபிலா பேகத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சட்டவிரோத செயலில் அவருக்குப் பின்னால் வேறு ஏதேனும் கும்பல் செயல்படுகிறதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.