இரவு விருந்தில் நண்பர்களுடன் குத்தாட்டம்…! போலீசை பார்த்ததும் உயிரை விட துணிந்த இளம்பெண்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

பெங்களூரு குண்டலஹள்ளி பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், தனது நண்பர்களுடன் எச்.ஏ.எல் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இரவு விருந்து கொண்டாடியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அதிக சத்தத்துடன் நடனமாடியதால், அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் ரோந்து போலீசார் அங்கு விசாரணைக்குச் சென்றுள்ளனர். விடுதி அறைக்குள் நுழைந்த காவலர்கள், அங்கிருந்த இளைஞர்களைக் கைது செய்துவிடுவதாக மிரட்டிப் பணம் கேட்டு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த முன்வந்தும், போலீசார் ரொக்கமாகவே வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால் அங்கிருந்தவர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். காவல்துறையினரின் இந்தத் தொடர் மிரட்டலால் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், பயத்தில் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயமடைந்த அவர், தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். மகளின் இந்த நிலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், லஞ்சம் கேட்டு மிரட்டிய காவலர்கள் யார் என்பது குறித்து உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

பட்டப்பகலில் பயங்கரம்… காவல் நிலையம் அருகே கார் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு… 7 பேர் ரத்த வெள்ளத்தில் சுருண்ட சம்பவம்… ஷாக்கிங் வீடியோ….!

ஹரியானாவின் சர்க்கி தாத்ரி மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே பட்டப்பகலில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர்…

7 minutes ago

“விஜய் அங்கிள் பாவம்ப்பா”…. சட்டமன்றத்தில் குண்டை தூக்கி போட்ட எம்.எல்.ஏ மகள்கள்… ரகசியத்தை அவையிலேயே போட்டு உடைத்த திமுக எம்.எல்.ஏ…!

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவை நிகழ்வுகள் கிரிக்கெட் போட்டியைப் போல பொதுமக்கள்…

24 minutes ago

சமையலறையில் ஒளிந்த மனைவி… இரக்கமின்றி கொன்ற கணவன்…. வெப்சீரிஸ் பாணியில் அரங்கேறிய பயங்கரம்…. திடுக்கிடும் பின்னணி…..!

கிழக்கு டெல்லியில் சொத்து தகராறு காரணமாக 'தி ஸ்டேர்கேஸ்' என்ற வெப் சீரிஸைப் பார்த்துத் திட்டமிட்டு மனைவியைக் கொடூரமாகக் கொலை…

41 minutes ago

“சட்டசபையில் பொங்கி எழுந்த பிரேமலதா”…. ‘அண்ணன் ஓபிஎஸ்’ கொடுத்த அல்டிமேட் காமெடி பதிலடி… கலகலத்த தமிழக சட்டமன்றம்…!

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதத்தின் போது, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இடையே நடந்த சுவாரசியமான உரையாடல்…

50 minutes ago

#BREAKING: விவாகரத்தை வாபஸ் வாங்கிய சங்கீதா…. நீதிமன்றத்தில் பரபரப்பு திருப்பம்…. CM விஜய் மகிழ்ச்சி…!

தமிழக முதலமைச்சரும், முன்னணி நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை அவரது…

55 minutes ago

“இபிஎஸ் பேரு சொல்லுங்க அண்ணே”…. அவையிலேயே கூச்சலிட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்…. அலட்டிக்கொள்ளாத வேலுமணி…. அடுத்த பரபரப்பு…!

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அதிமுக மற்றும் ஆளும் திமுக இடையே காரசார விவாதங்கள் எழுந்த நிலையில், முன்னாள்…

2 மணத்தியாலங்கள் ago