அடேங்கப்பா…! இத்தனை கோடி விலையா…? சொகுசு காரில் வந்து இறங்கி நெட்டிசன்களை மிரள வைத்த பாடகி… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 19, 2026

Spread the love

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏவும் பிரபல இளம் பாடகியுமான மைதிலி தாகூர், மும்பையின் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலுக்கு சுமார் ரூ.10.50 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையும் கொண்ட அல்ட்ரா லக்ஸரி ரோல்ஸ் ராய்ஸ் குல்லினன் காரில் வந்து இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீல நிற சொகுசு காரில், பிரத்யேக டிரைவருடன் வந்திறங்கிய மைதிலி தாகூரைத் தரிசனத்திற்காகத் திரண்டிருந்த மக்கள் திரள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவர், ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்து புகைப்படங்களுக்கும் போஸ் கொடுத்தவாறு பந்தலின் நுழைவு வாயிலை நோக்கிச் சென்றார். இந்த சொகுசு கார் அவளுடைய சொந்த காரா அல்லது சிறப்பு ஏற்பாடாக அனுப்பட்டதா என்பது குறித்துத் தகவல்கள் வெளியாகவில்லை.

   

https://www.instagram.com/reel/DdY8-4FzosR/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==

   

முன்னதாக, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லமான ‘அன்டிலியா’வில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட மைதிலி தாகூருக்கு, ஈஷா அம்பானி நேரில் பாராட்டு தெரிவித்தார். தனது குழந்தைகள் தினமும் மைதிலியின் பாடல்களை விரும்பி கேட்பதாக ஈஷா அம்பானி கூறிய நிலையில், அடுத்ததாக லால்பாக் சா ராஜாவில் அவர் நடத்திய இந்த மாஸ் கார் என்ட்ரி வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.