“ஸ்கூட்டரில் மலைப்பாம்புடன் மாஸ் ரைடு…” அதிர்ந்து போன ஐ.டி ஊழியர்கள்…. ஆனாலும் ரொம்ப தைரியம் தான்… நெட்டிசன்களை உலுக்கிய நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 19, 2026

Spread the love

ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தின் நுழைவு வாயில் அருகே, பிரம்மாண்டமான மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிவதைக் கண்டு அங்கிருந்த ஊழியர்களும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அங்கு வந்த ஐடி துறை ஊழியர் ஒருவர், எந்தவித பயமும் இன்றி, பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி வெறும் கையாலேயே அந்த பெரிய மலைப்பாம்பைப் பிடித்துள்ளார். மேலும், அந்த பாம்பைத் தனது கையில் சுற்றிக்கொண்டு, சாதாரணமாகத் தனது ஸ்கூட்டரில் அமர்ந்து ஓட்டிச் சென்ற காட்சி அங்கிருந்த அனைவரையும் உரைய வைத்தது.

இந்த நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வைரலாகி வருகிறது. அந்த நபர் வனத்துறை சார்ந்த அதிகாரப்பூர்வப் மீட்புக் குழுவைச் சேர்ந்தவரா அல்லது தானாகவே முன்வந்து பாம்பை அகற்றினாரா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. பயிற்சி இல்லாத நபர்கள் இதுபோன்று வன விலங்குகளையோ அல்லது பாம்புகளையோ வெறும் கையால் பிடிப்பது உயிருக்கே ஆபத்தாக முடியும் என வனவிலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.