ரயில் இன்ஜினில் சிக்கி தண்டவாளத்தில் 1 கிமீ இழுத்துச் செல்லப்பட்ட பைக், கைதான இளைஞர் கோர்ட்டில் சொன்ன காரணம் – அசந்து போன நீதிபதி…

By Elango on மார்கழி 13, 2025

Spread the love

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ரயில் அருகில் வந்ததால் ரயில்வே கேட்டுக்குள் பைக்கை போட்டுவிட்டு இளைஞர் ஒருவர் அங்கிருந்து வேகமாக ஓடிவிட்டார். அப்போது அந்த வழியாக ரயில் வந்த போது அந்த பைக் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. இதை அடுத்து ரயில்வே போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர்.

கோர்ட்டில் அந்த இளைஞர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நடந்த விசாரணையில், எதற்காக இப்படி ரயில் செல்லும் தண்டவாளப்பகுதியில் பைக்கை போட்டுவிட்டு சென்றீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த இளைஞர், டாஸ்மாக் மூடும் நேரம் ஆனதால் அவசரகதியில் பைக்கை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டேன் என்று பதில் அளித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.