இதெல்லாம் ஒரு பொழப்பா..? உல்லாச வீடியோவை விற்ற காதலன்…. முகம் சுதைந்த நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண்…. பதற வைக்கும் சம்பவம்…!!

By Devi Ramu on தை 14, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த காட்சிகளை ஆபாச இணையதளங்களில் விற்றுப் பணம் சம்பாதித்த இளைஞர், அந்தப் பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். விவாகரத்து பெற்ற உமா என்ற பெண், அர்ஜுன் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். தனது முதல் மனைவியை பிரிந்த அர்ஜுன், உமாவுக்குத் தெரியாமல் வீடியோக்களை எடுத்து லட்சக்கணக்கில் லாபம் பார்த்துள்ளார். இந்த விஷயம் தெரிந்து உமா தட்டிக்கேட்டதால், தனது ரகசியத் தொழில் பாதிக்கப்படும் எனப் பயந்து அர்ஜுன் உமாவை  கொல்ல திட்டமிட்டார்.

இந்த நிலையில் சமாதானம் செய்வதாகக் கூறி உமாவை ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்ற அர்ஜுன், அவரது தலையில் கல்லைப் போட்டுப் படுகொலை செய்து அங்கேயே புதைத்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு விலங்குகள் அந்த உடலைத் தோண்டி எடுத்ததால் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உமாவின் செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது அர்ஜுன் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், பெண்ணின் விருப்பத்திற்கு மாறாகப் பல வக்கிரமான வீடியோக்களை எடுத்து விற்பனை செய்ததும், மிரட்டியதால் கொலை செய்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.