நிஜமான ‘திரீ இடியட்ஸ்’ காட்சி… ரயில் நிலையத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி… டாக்டர் மனைவிக்கு வீடியோ கால் செய்து பிரசவம் பார்த்த இளைஞர்… குவியும் பாராட்டுக்கள்..!!

By Soundarya on சித்திரை 8, 2026

Spread the love

மும்பை ராம் மந்திர் ரயில் நிலையத்தில், ‘திரீ இடியட்ஸ்’ திரைப்படக் காட்சியை நினைவுபடுத்தும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான மற்றும் பிரமிக்கத்தக்க சம்பவம் அரங்கேறியுள்ளது. ரயில் நிலையத்தில் இருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அந்த நேரத்தில் அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை. இக்கட்டான இந்தச் சூழலில், அங்கிருந்த ஒரு நபர் துரிதமாகச் செயல்பட்டு, மருத்துவராக இருக்கும் தனது மனைவிக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் செய்தார்.

மருத்துவர் மனைவியின் நேரடி ஆலோசனையின்படி, வீடியோ கால் மூலமாகவே அந்த நபர் பிரசவம் பார்க்கத் தொடங்கினார். அந்த இடத்திலிருந்த மற்றவர்களின் உதவியுடன், ஒரு வழியாகப் பிரசவம் வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது தாயும், பிறந்த ஆண் குழந்தையும் நலமாக உள்ளனர். ஆபத்தான நேரத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு உயிரைக் காப்பாற்றிய அந்த நபரின் சமயோசித புத்தியையும், அவருக்கு வழிகாட்டிய பெண் மருத்துவரையும் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.