அறந்தாங்கி தொகுதியில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரனின் மகன் சரண், தவெக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு எதிராகச் செயல்படும் இவரது இந்த முடிவு, கூட்டணிக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் குடும்பத்தினர் 2011 முதல் இத்தொகுதியைத் தக்கவைத்து வரும் நிலையில், ராமச்சந்திரன் கண்டிப்பாகத் தோல்வியைத் தழுவுவார் எனச் சரண் வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஆளும் கட்சியான திமுகவைச் சேர்ந்த ஒரு முக்கியப் புள்ளியின் வாரிசே மாற்றுக்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது, தேர்தல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
