பிலிப்பைன்ஸில் கடினமான பல் மருத்துவ உரிமத் தேர்வு முடிவுகளுக்காக ஒரு இளைஞர் தனது மடிக்கணினி முன் பதட்டத்துடன் காத்திருந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய தந்தை நம்பிக்கையுடன் நின்றுகொண்டிருக்க, சில நிமிடத் தவிப்பிற்குப் பிறகு ‘தேர்ச்சி’ என்ற முடிவு திரையில் தோன்றியது. இதன் மூலம் அவர் அதிகாரப்பூர்வமாக உரிமம் பெற்ற பல் மருத்துவர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.
A man in the Philippines is seen at home checking his Dentist Licensure Exam results on his laptop, one of the most difficult professional exams to pass. His father stands beside him as he waits nervously. After tense moments, the result shows PASS, officially making him a… pic.twitter.com/M8Zw176bPu
— AD (@ADRWC) January 12, 2026
இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டவுடன் அங்கிருந்த அவரது தாய், சகோதரர் மற்றும் பாட்டி ஆகியோர் ஆனந்தக் கண்ணீர் விட்டு, அந்த இளைஞரின் கடின உழைப்பால் கிடைத்த வெற்றியை உணர்ச்சிகரமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 2026-ன் தொடக்கத்தில் குடும்பமே ஒன்றிணைந்து இந்தச் சாதனையை நெகிழ்ச்சியுடன் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
