மலைக்க வைக்கும் விவாகரத்துத் தொகை… மனைவிக்கு ரூ. 71,100 கோடி… பில் கேட்ஸின் பிரம்மாண்ட செட்டில்மென்ட்..!!

By Soundarya on தை 13, 2026

Spread the love

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தனது மனைவி மெலிண்டாவுடன் 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்ய ஒப்புக்கொண்ட நிலையில், அதன் இறுதி கட்டப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. மூன்று பிள்ளைகளைக் கொண்ட இந்தத் தம்பதி, பிரிந்த பின்னரும் தங்களது ‘பில் & மெலிண்டா கேட்ஸ்’ அறக்கட்டளையைத் தொடர்ந்து இணைந்து நடத்தி வந்தனர்.

விவாகரத்து ஒப்பந்தத்தின்படி மொத்தம் சுமார் 1,12,800 கோடி ரூபாய் ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதில் ஏற்கனவே 41,700 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மீதமுள்ள 71,100 கோடி ரூபாயை மெலிண்டாவுக்கு வழங்கி பில் கேட்ஸ் தனது இறுதித் தொகையைச் செலுத்தியுள்ளார்.