செங்கல்பட்டு நகர போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட செங்கல்பட்டு டவுன் பகுதியை சேர்ந்தவர்தான் தீபக் என்ற 21 வயது இளைஞர். இவ தன்னுடைய பிறந்தநாளை நண்பரான தேவ் மற்றும் சிலருடன் கொண்டாடியுள்ளார். கேக் வெட்டி முடித்ததும் தேவ் தன்னுடைய நண்பர் தீபக்குக்கு பிறந்தநாள் பரிசாக நாட்டு வெடிகுண்டை வழங்கிய அதனை வீச சொல்லினார். இதனை தொடர்ந்து கையில் வெடிகுண்டை வாங்கிய தீபக் அதனை வீசி வெடிக்க செய்து அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவிய நிலையில் அதனை பார்த்தவர்கள் உடனே போலீசாருக்கு வீடியோவை பகிர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் தீபக் மற்றும் அவரது நண்பரை தேடி வந்த நிலையில் தன்னை தேடுவதை அறிந்து கொண்ட தீபக் தலைமறைவாக இருந்தார். ஒரு கட்டத்தில் போலீசாரின் பிடியிலிருந்து தப்பா முயன்ற தீபக்கை போலீசார் துரத்தி செல்லும்போது கால் தவறை கீழே விழுந்ததில் அவருடைய வலது காலில் முறிவு ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலில் மாவு கட்டு போடப்பட்ட நிலையில் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். சாதாரணமாக பிறந்தநாளுக்கு நண்பன் கொடுத்த பரிசு இறுதியில் இப்படி ஒரு ஆபத்தை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
