மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயணம்.. நாளை முதல் டோக்கன் விநியோகம்.. அரசு அறிவிப்பு.!

By Nanthini on ஆனி 20, 2025

Spread the love

சென்னையில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிப்பதற்கான டோக்கன் ஜூன் 21 நாளை முதல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை 31 காலை வரை சென்னை முழுவதும் 40 மையங்களில் இந்த டோக்கன் வழங்கப்பட உள்ளதாகவும் டோக்கன் பெறுவதற்கு இருப்பிட சான்று, குடும்ப அட்டை, வயது சான்று மற்றும் இரண்டு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கு டோக்கன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.