குழந்தைகளைப் பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்த வாலிபர் ஒருவர், வீட்டின் கேட் அருகே ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளார். ஆனால், அவசரத்தில் ஸ்கூட்டர் எஞ்சினை அணைக்காமலும், சாவியைக் கழற்றாமலும் அப்படியே விட்டுவிட்டு கேட்டைத் திறக்கச் சென்றுள்ளார். அப்போது ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த சிறுமி, எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டரின் ஆக்சிலேட்டரை திருப்பியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர், அதிவேகத்தில் முன்னோக்கிப் பாய்ந்து சென்று சற்று தொலைவில் பயங்கரமாக விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிறுமிக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டு உயிர் தப்பினார். “குழந்தைகளை வாகனங்களில் அமர வைக்கும்போதும், வாகனத்தை நிறுத்தும்போதும் செய்யும் சிறிய அலட்சியம் கூட பெரிய விபத்தில் போய் முடியலாம்” என்று எச்சரிக்கும் வகையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
