“கிரஹப்பிரவேசத்திற்காக  வந்த இடத்தில் இப்படியா ஆகணும்…?” ஆன்மீக பயணத்தில் மாயமான ஆஸ்திரேலிய வாழ் இந்திய பெண்… கதறும் குடும்பத்தினர்…!!

By Devi Ramu on ஆவணி 28, 2026

Spread the love

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள கொடூர வெள்ளப்பெருக்கில் பலிய எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மாயமாகியுள்ள சோகச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் சித்யால மண்டலத்தில் உள்ள பெத்தகபர்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்டிமல்ல சுஹாசினி ரெட்டி (42). இவர் கடந்த சில ஆண்டுகளாகத் தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார். ஹைதராபாத்தில் உள்ள தனது புதிய வீட்டின் கிரகப்பிரவேச விழாவில் கலந்துகொள்வதற்காக கடந்த ஆகஸ்ட் 19 அன்று இந்தியா வந்த இவர், ஆகஸ்ட் 23 அன்று நேபாளத்திற்கு ஆன்மீகச் சுற்றுலா சென்றுள்ளார்.

   

இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில் சிக்கி சுஹாசினி ரெட்டி எவ்வித தடயமும் இன்றி காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், இவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.