தமிழகத்தில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் (Laptops) வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்ற புதிய திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் மற்றும் விவசாயக் கல்லூரிகளில் பயிலும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
முதற்கட்டமாக, இறுதி ஆண்டு பயிலும் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நாளை நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கின்றனர்.
