சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கோயில் பிரசாதம் என்று கூறி மயக்க மருந்து கலந்த பால்கோவாவை கொடுத்து பெண்களிடம் நகை திருடிய ரவணம்மா என்ற பெண் போலீசாரிடம் சிக்கியுள்ளார். ஆன்லைன் விளையாட்டுகளில் அடிமையாகி பல லட்சங்களை இழந்த இவர், அந்தக் கடனை அடைப்பதற்காக இந்த நூதன திருட்டு வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து, இனிப்பு கொடுத்து அவர்கள் மயங்கியதும் நகைகளை அபேஸ் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட இவரிடமிருந்து சுமார் 19.5 சவரன் தங்க நகைகளை ஜாம்பஜார் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
விசாரணையில், ரவணம்மா ஏற்கனவே கொடியரசி என்ற பெண்ணிடம் 21 சவரன் நகைகளை இதே பாணியில் திருடியது அம்பலமானது. தற்போது சுஜாதா என்பவரிடம் 6 சவரன் நகையைப் பறிக்க முயன்றபோது கச்சிதமாகப் பிடிபட்டார். அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டாம் என்றும், யாரையும் சந்தேகத்திற்கிடமாக வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் சென்னை மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…
மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…
மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…
தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…
ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…