“இப்படியும் கூடவா இருப்பாங்க….!!” Filter மூலம் புகைப்படத்தை அனுப்பி ஏமாற்றிய பெண்….. உண்மை அறிந்த இளைஞரின் வெறிச்செயல்…..!!

By Srimathi on புரட்டாதி 3, 2025

Spread the love

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அருண் (26). இவர் instagram மூலம் ராணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். 52 வயதான ராணி, தனது வயதை மறைத்து filter மூலம் புகைப்படத்தை பதிவேற்றி இளம்பெண் போல அருணை ஏமாற்றியுள்ளார். ராணியை முதல்முறை சந்தித்த பொழுது, அவருக்கு 52 வயது என்றும், திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பதையும் தெரிந்து கொண்ட அருண், அவரை ஏமாற்றி ரூ. 1.5 லட்சம் பெற்றுள்ளார்.

கொடுத்த பணத்தை திரும்ப கேட்டும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும், ராணி அருணை வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண், ராணியை ஊருக்கு ஒதுக்குப்புற பகுதிக்கு அழைத்துச் சென்று, அவரது தாவணியை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அருணை கைது செய்து விசாரித்ததில், தான் செய்த கொலையை அவர் ஒப்புக்கொண்டார்.