சின்னத்திரை சீரியல் என்றாலே நமக்கு நினைவு வருவது சன் டிவி சீரியல் தான். தற்போது 3 புத்தம் புது சீரியல்களை சன் டிவி களமிறக்க தயாராகியுள்ளது. அது என்னென்ன சீரியல்கள் என்பதை இங்கு பார்ப்போம்.
நாகமணி சீரியல்
Ishq Ki Dastaan – Naagmani என்ற சீரியலை தமிழில் டப்பிங் செய்து, “நாகமணி” என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளது. இது 3 ஆண்டுகளுக்கு முன்பே டப்பிங் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இரவு 10:30 மணிக்கு அல்லது 11 மணிக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
வீர ஹனுமான்
தற்பொழுது ராமாயணம் சீரியல் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், இதை தொடர்ந்து வீர ஹனுமான் நெடுந்தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இது ராமாயணத்துக்கு பதிலாக 6:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதுவும் ஹிந்தியில் இருந்து டப்பிங் செய்யப்பட்ட சீரியல் தான்.
பராசக்தி
இது ரீமேக் தொடரல்ல. இந்தத் தொடரில் மிஸ்டர் மனைவி சீரியலில் ஜோடியாக நடித்துள்ள பவன் சந்திராவும் தேப்ஜானியும் ஜோடியாக நடிக்கிறார்கள். மேலும் விஜயகுமார், ரமேஷ் கண்ணா, அஜய் ஆகியோர் இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இது எப்பொழுது ஒளிபரப்பாகும் என்பது சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது.
