“என்னை கொன்று சூட்கேஸில் அடைச்சிருவானாம்” அவன்கிட்ட இருந்து காப்பாத்துங்க… அழுதுகொண்டே வீடியோ வெளியிட்ட பெண்..!!

By Soundarya on மார்கழி 31, 2025

Spread the love
சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், இந்துப் பெண் ஒருவர் தான் சந்தித்த துயரமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பெண் ஏற்கனவே திருமணமானவர் மற்றும் அவருக்குக் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் குழந்தைகளை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் ஒரு முஸ்லிம் நபரால் மூளைச்சலவை செய்யப்பட்டதாகவும், அதனால் தனது கணவன் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து அந்த நபருடன் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தற்போது அந்த நபர் தன்னை அடித்துத் துன்புறுத்துவதோடு, கொன்று ஒரு சூட்கேஸில் அடைத்து வைத்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் அவர் கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான சூழலில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.