நடிகர் கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படத்தில் ஊரோரம் புளியமரம் பாடல் பாடி ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் (75) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த இவர் பல கிராமிய பாடல்களை பாடி புகழ்பெற்றவர். இவர் மாட்டு தாவணி, தெனாவட்டு உள்ளிட்ட திரைப்படங்களிலும் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கிராமிய பாடல்கள் பாடிய ஏராளமான விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். அதில் கலைமாமணி விருதும் ஒன்று. இவருடைய திடீர் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
