ஊரையே நம்ப வைத்த ‘நாகினி’ நாடகம்..! “என் கணவருக்கு ஏதாவது நடந்தால்” காதலனை கரம் பிடித்த கையோடு பெற்றோருக்கு மிரட்டல்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!!

By Soundarya on மாசி 13, 2026

Spread the love
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா (Aureaiya) பகுதியில், தன்னை ஒரு ‘நாகினி’ என்று கூறிக்கொண்டு விசித்திரமான செயல்களில் ஈடுபட்டு வந்த இளம்பெண், தற்போது தனது காதலனைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்தப் பெண் தனது படுக்கையில் பாம்பின் சட்டையை (கெஞ்சட்டை) உரித்து வைத்துவிட்டு, அதனுடன் தனது வளையல்கள் மற்றும் கழுத்து மாலைகளையும் வைத்துவிட்டு மாயமானார். தான் ஒரு நாகினி என்றும், தனது ஆன்மீகத் தேடலுக்காகச் செல்வதாகவும் குடும்பத்தினரை நம்ப வைத்த அவர், தற்போது அதே ஊரைச் சேர்ந்த சத்நாம் என்ற இளைஞனைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

காதல் திருமணத்திற்குப் பிறகு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அந்தப் பெண், தனது கணவரின் குடும்பத்திற்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்குத் தனது பெற்றோரே பொறுப்பு எனத் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தங்களைப் பெற்று வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கிய பெற்றோரை ஒரு நொடியில் ‘வில்லன்களாக’ சித்தரிக்கும் இவரது செயல் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு பக்கம் ‘நாகினி’ நாடகம், மறுபக்கம் பெற்றோருக்கே மிரட்டல் என இந்தப் பெண்ணின் விசித்திரமான போக்கு அவுரையா பகுதியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.