அந்த பெண்ணின் வாழ்க்கையை சீரழிச்சிட்டாரு… கேரவன் செல்ல ரூ.2 லட்சம்… விஜய் சேதுபதி மீது குற்றம்சாட்டிய பெண்..!!

By Soundarya on ஆடி 30, 2025

Spread the love

தமிழ் சினிமா உலகில் முன்னோடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. சினிமாவில் நுழைந்த குறுகிய நாட்களிலேயே தனக்கென்று தனி ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பு மூலமாகவும் பேச்சு மூலமாகவும் சினிமாவில் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துள்ளார். தற்போது வரும் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் அடிக்கடி சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பல உதவிகளை செய்து வருகின்றார்.

இதனாலையே இவருக்கு குறுகிய காலத்தில் தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான விடுதலை 2, மகாராஜா படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதேசமயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை இவர் தான் தொகுத்து வழங்கியிருந்தார். தற்போது தலைவன் தலைவி படத்தில் நடித்துள்ளார்.

   

இந்நிலையில் ரம்யா மோகன் என்பவர் தனக்குத் தெரிந்த பெண்ணின் வாழ்க்கையை விஜய் சேதுபதி அழித்துவிட்டதாக  எக்ஸ் தளத்தில் குற்றம் சாட்டியுள்ளார். நீக்கப்பட்ட அப்பதிவில், விஜய் சேதுபதி கேரவன் செல்ல, ரூ.2 லட்சம், பிற தேவைகளுக்கு ரூ.50,000 கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது கதை அல்ல, ஒரு பெண்ணின் வலி என பதிவிட, ரசிகர்கள் ‘ஆதாரத்துடன் பேசுங்கள்’ என கொந்தளிக்கின்றனர். ஆனால், விஜய் சேதுபதி இன்னும் இதற்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.