அவன் சாகனும்..! மனைவியின் மாஸ்டர் ப்ளான்… சாதுர்யமாக தப்பித்த கணவன்… கள்ளக்காதலால் கொலை முயற்சி… நடுங்க வைத்த செல்போன் மெசேஜ்…!!

By Gayathri on ஆவணி 11, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தை அடுத்த சிலாகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வர் ராவ். இவருக்கும் பவானி என்பவருக்கும் திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ள நிலையில், கம்மம் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ராஜேஸ்வர் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதியன்று வழக்கத்திற்கு மாறாக மதிய நேரத்திலேயே வீட்டிற்கு வந்த அவர், தனது மனைவி பவானி கொரியர் ஊழியரான சைதுலு என்பவருடன் தவறான உறவில் இருந்ததை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக குடும்பத்தார் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து கூட்ட ராஜேஸ்வர் முடிவு செய்துள்ளார்.

பஞ்சாயத்துக்காக தனது சகோதரர்களை அழைக்கச் சென்ற ராஜேஸ்வரை, பவானியின் காதலன் சைதுலு பின் தொடர்ந்து சென்று தாக்க முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தப்பிய ராஜேஸ்வர், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து மனைவியின் செல்போனை ரகசியமாகச் சோதித்துள்ளார். அப்போது, வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்களைக் கண்டு அவர் பேரதிர்ச்சிக்கு உள்ளானார். அதில், ராஜேஸ்வரை சாலை விபத்து போல திட்டமிட்டு கொலை செய்ய இருவரும் சதி செய்ததும், இதற்குத் தயங்கிய காதலனை பவானி கொலை மிரட்டல் விடுத்து சம்மதிக்க வைத்ததும் அந்த குறுஞ்செய்திகள் மூலம் அம்பலமானது.

   

இந்த கொலைச் சதி தொடர்பான உரையாடல்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஆதாரமாகச் சேகரித்த ராஜேஸ்வர் ராவ், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று தோர்ணக்கல் காவல் நிலையத்தில் தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டுப் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் முதற்கட்டமாக ‘ஜீரோ எஃப்.ஐ.ஆர்’ பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் மேல்விசாரணைக்காக இந்த வழக்கை கம்மம் ஊரக காவல் நிலையத்திற்கு மாற்றினர். தற்போது, கணவர் அளித்துள்ள டிஜிட்டல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு பவானி மற்றும் சைதுலு ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.