உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் நடந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் என்பவரின் மனைவி ரூபி, கௌரவ் என்ற நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இந்நிலையில் ராகுல் அவர்கள் இருவரையும் தவறான நிலையில் நேரில் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல், ரூபியைத் தாக்கிவிட்டு, இந்த விவகாரத்தை ஊர் முழுக்கத் தெரியப்படுத்துவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் தனது ரகசியம் அம்பலமாகிவிடும் என்ற பயத்தில், ரூபி தனது காதலன் கௌரவ் மற்றும் அவனது நண்பர்களின் உதவியுடன் ராகுலைக் கொல்லத் திட்டமிட்டார். ராகுலைக் கொலை செய்த பிறகு, உடலை மறைப்பதற்காக கிரைண்டர் மற்றும் பெரிய பைகளைச் சந்தையிலிருந்து வாங்கியுள்ளனர். பின்னர் கொலை செய்துவிட்டு உடலை கிரைண்டரில் போட்டு அரைத்து அவர் அந்த துண்டுகளை பாலிதீன் பைகளில் வைத்து பின்னர் பல்வேறு இடங்களில் வீசினார்.
உடலைத் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்த முயன்றது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. தனது தந்தையைக் கொன்ற தாய்க்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று ராகுலின் இரண்டு குழந்தைகளும் அழுதுகொண்டே கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது ரூபி மற்றும் கௌரவ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரம் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
