தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, கடந்த ஆண்டைப் போலவே ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, திட்டமிட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது ஜனவரி 7, 2026 அன்றே விநியோகத்தைத் தொடங்க அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு ஆகியவை அடங்கிய இந்தத் தொகுப்பு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தமிழ்நாடு அரசிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. பயனாளிகள் நெரிசலின்றிப் பெற்றுக்கொள்ள டோக்கன் வழங்கும் முறையும் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
