தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்காக அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது கணவரைக் கொலை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பத்மா என்ற அந்த ஆசிரியை, தனது காதலன் கோபியுடன் இணைந்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் லக்ஷ்மன்நாயக்கை மூச்சுத் திணறடித்துக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்த அடுத்த நாள், எவ்வித பதற்றமும் இன்றி ஆசிரியை பத்மா வழக்கம் போல பள்ளிக்குச் சென்று பணியாற்றியுள்ளார். இதனையடுத்து லக்ஷ்மன்நாயக்கின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில், பத்மா மற்றும் அவரது காதலன் கோபி ஆகியோர் செய்த சதி அம்பலமானது. இதனையடுத்து, இன்று இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
