“ஆஸ்துமா, மூச்சுத் திணறல் பிரச்சினை வரும்” தமிழ்நாட்டில் இந்த மரங்களை வளர்க்க தடை… அரசு முக்கிய எச்சரிக்கை…!!

By Soundarya on மார்கழி 29, 2025

Spread the love
சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘கோனோகார்பஸ்’ (Conocarpus) மரங்களுக்குத் தமிழ்நாடு அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இந்த மரங்கள் நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சி நீர்மட்டத்தைப் பாதாளத்திற்குச் செல்ல வைப்பதோடு, இவற்றின் மகரந்தத் துகள்கள் காற்றில் பரவி மனிதர்களுக்கு ஆஸ்துமா, மூச்சுத் திணறல், இருமல் மற்றும் உடல் அரிப்பு போன்ற பல்வேறு ஒவ்வாமை  பிரச்சனைகளை உருவாக்குகின்றன. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இம்மரங்கள், அதன் ஆபத்துகள் கருதி தற்போது 2025-ஆம் ஆண்டில் மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் யாரும் தங்கள் வீடுகளிலோ அல்லது பொது இடங்களிலோ இந்த மரங்களை நட வேண்டாம் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே வீட்டின் அருகிலோ அல்லது தோட்டங்களிலோ கோனோகார்பஸ் மரங்கள் இருந்தால், அவற்றை உடனடியாக அகற்றுமாறு வனத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன. பொதுமக்களின் நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பாதுகாக்கவும், சுவாச மண்டல பாதிப்புகளைத் தவிர்க்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.