வரும் 7 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும்… தவெக தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

By Soundarya on சித்திரை 16, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார். வரும் 7 நாட்களுக்கு அனைத்து வீடுகளின் முன்பும் கட்சியின் ‘விசில்’ சின்னத்தைக் கோலமாக வரைந்து, தங்களின் ஆதரவை வெளிப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், வரும் தேர்தலில் தமக்கு ஒரே ஒருமுறை வாய்ப்பளிக்குமாறும், அதன் மூலம் மே 4-ஆம் தேதி தமிழகத்தில் ஒரு புதிய விடியல் பிறக்க வேண்டும் என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் பேசுகையில், ஊழலற்ற ஆட்சியைத் தருவதே தனது கட்சியின் முக்கிய நோக்கம் என்று உறுதியளித்தார். தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளைக் கடுமையாக விமர்சித்த அவர், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், இந்தத் தேர்தல் ஒரு ‘விசில் புரட்சியாக’ அமையும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தின் 2.25 கோடி ரேஷன் கார்டு தாரர்களின் ஆதரவைத் திரட்டும் வகையில் அவரது பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது