actor Dhanush

நடிகர் தனுஷ் கையில் அணிந்திருந்த லக்ஸ்சரி வாட்சின் விலை… அடேங்கப்பா – தலை சுத்திப் போன ரசிகர்கள்!

By Elango on மாசி 7, 2026

Spread the love

நடிகர்களில் சிலர் விதவிதமான ஆபரணப் பொருட்களை வாங்குவதில் ஆபரணம் ஆர்வம் காட்டுவர். அந்த வகையில் சிலர் கூலிங் கிளாஸ்களை விதவிதமாக வாங்குவார்கள். இன்னும் சிலர் அழகழகான தொப்பிகளை ஆர்வமாக வாங்குவார்கள். இன்னும் சிலர் மோட்டார் பைக்குகள் கார்கள் என விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.அந்த வகையில் நடிகர் தனுஷ் விதவிதமான உயர்ந்த ரக வாட்ச்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் நடிகர் தனுஷின் 55வது படத்தின் துவக்க விழா பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் சாய் பல்லவி ஸ்ரீ லீலா டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வழக்கம் போல வெள்ளை வேட்டி சட்டையில் நடிகர் தனுஷ் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது தனுஷ் கையில் கட்டியிருந்த லக்ஸ்சரி வாட்ச் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

   

இந்த வாட்ச் லக்ஸ்சரி வாட்ச் மேக்கிங் கம்பெனிகளில் ஒன்றான patek-philippe நிறுவனத்தின் cubitus வாட்ச் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாட்ச்சின் டிசைனை patek-philippe நிறுவனம் சமீபத்தில் டிசைன் செய்து வெளியிட்டது. 18 கேரட் ரோஸ் கோல்டு ஸ்கிராட்சஸ் இல்லாத ஸ்டைன்லெஸ்டிலில் இந்த வாட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. 45mm டயல் கொண்ட ஒரு automatic power reserved வாட்ச் ஆக இது உள்ளது. இந்த வாட்சின் விலை 90 லட்சம் ரூபாய். இதுபோல் நடிகர் தனுஷிடம் பல லக்ஸ்சரி வாட்ச்கள் இருப்பதாகவும் எல்லாமே யூனிக்கான வாட்ச்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.