அடுத்த பரபரப்பு…. மருமகளுக்கு எதிராக மகளை களமிறக்குகிறாரா ராமதாஸ்?…. அன்புமணிக்குச் சவால் விடும் அய்யா.. அனல் பறக்கும் ‘தைலாபுர’ அரசியல்..!

By Nanthini on மாசி 7, 2026

Spread the love

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில், பாட்டாளி மக்கள் கட்சிக்குள் நிலவும் குடும்பப் போட்டி தற்பொழுது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இணைந்துவிட்ட நிலையில், அந்தத் தொகுதியில் தனது மனைவி சௌமியாவை வேட்பாளராகக் களமிறக்க அவர் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறார். அதே சமயம், தைலாபுரத் தோட்ட வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல்களின்படி, தனது மகள் காந்திமதியை அதே தொகுதியில் போட்டியிட வைக்க மருத்துவர் ராமதாஸ் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் பாப்பிரெட்டிபட்டியில் ‘மருமகள் vs மகள்’ என்ற குடும்பப் போர் உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

கூட்டணி விவகாரத்தில் அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடிப்பதாகத் தெரிகிறது. அன்புமணி ஏற்கனவே அதிமுகவுடன் கைகோர்த்துள்ள நிலையில், ராமதாஸ் இன்னும் தனது இறுதி முடிவை வெளிப்படையாக அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். இது கட்சித் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பிடி யாருடைய கையில் இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருவரும் இருப்பதால், பாப்பிரெட்டிபட்டி தொகுதி வரும் தேர்தலில் ஒரு நட்சத்திரத் தொகுதியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.