போடு அடிய… பெற்றோருக்கு பெரிய பிரச்சினை… மாணவர்கள் இதை செய்தால் கடும் நடவடிக்கை…! அமைச்சர் கொடுத்த வார்னிங்… தமிழக அரசின் அதிரடி முடிவு…!!!

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில், தனியார் பங்களிப்புடன் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னி அரசு, சரத்குமார், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு புதிய வகுப்பறைகளைத் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளி மாணவர்கள் சைக்கிள் ஓட்டலாம் என்றும், ஆனால் எந்தக் காரணம் கொண்டும் இருசக்கர வாகனங்களை ஓட்டக் கூடாது என்றும் கூறினார். மீறி மாணவர்கள் பைக் ஓட்டுவது கண்டறியப்பட்டால், அவர்களின் பெற்றோர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், இதுகுறித்து பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், சமூகத்தில் நடக்கும் பல குற்றங்களுக்கு போதையே முதன்மைக் காரணமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாகப் பரவியுள்ள இந்தப் போதை கலாச்சாரத்தை அரசு படிப்படியாகக் களைந்து வருகிறது என்றார். பள்ளி மாணவர்களின் பாதையில் போதைப்பொருள் இருக்கக் கூடாது என்ற நோக்கில், பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை எனத் துணிச்சலாக 716 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Swetha

Recent Posts

“வெயில் தாங்க முடியல… வாட்டர் அடிங்க…” போலீஸிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்…! போராட்டக் களத்தில் டான்ஸ் ஆடி… இணையத்தை கலக்கும் சுவாரஸ்ய வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கடுமையான…

12 minutes ago

முதல்வருக்கு ஜனநாயகன் தானே முக்கியம்….! அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்…. மக்களின் நிலையை கண்டு கொதித்த எடப்பாடி பழனிச்சாமி…!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…

25 minutes ago

லோனாவாலாவில் நடுக்கம்…! பள்ளத்தாக்கில் விழுந்து மர கிளையில் சிக்கிய இளைஞர்….! வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…

45 minutes ago

“நான் அவரை கொன்னுட்டேன்… என்னை அரெஸ்ட் பண்ணுங்க…” போதையில் தூங்கிய நபர்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…

1 மணத்தியாலம் ago

“போதைப்பொருள் வைச்சுருக்கிய…” மாணவர்கள் மீது பொய் வழக்கு… “உங்க வாழ்க்கையையே அழிச்சிருவேன்…” மிரட்டிய மும்பை போலீஸ்… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ…!

மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…

1 மணத்தியாலம் ago

“யார்கிட்டயும் சொல்லக்கூடாது பாப்பா…” 20 ரூபாய் கொடுத்து மாணவியை மிரட்டிய நடத்துனர்…. தாயிடம் சொல்லி அழுத மகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago