தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் இபிஎஸ் மீது கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளன. அதன் வெளிப்பாடாக செங்கோட்டையன் சமீபத்தில் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என கூறியிருந்ததால் அவரைக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து ஈபிஎஸ் நீக்கி இருந்தார்.
இதனை தொடர்ந்து ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை சமாளித்து வந்த இபிஎஸ்ஸுக்கு செங்கோட்டையனின் கழக குரல் முதலில் கொஞ்சம் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. உடனடியாக ஆக்சன் எடுத்தால் தொண்டர்கள் இடம் அவருக்கு அனுதாபம் கிடைக்கும் என்று கணித்த ஈ பி எஸ் முதலில் கட்சிப் பதவியை மட்டும் பறித்தார். கட்சியில் பெரிய சலசலப்பு ஏற்படாத நிலையில் சரியான தருணத்திற்கு காத்திருந்த அவர் பசும்பொன்னில் நடந்த நிகழ்வை காரணமாக்கி செங்கோட்டையனை நீக்கியுள்ளார்.
