செங்கோட்டையன் நீக்கம்… இபிஎஸ் இல்லத்தில் விடிய விடிய… தமிழக அரசியலில் புதிய பரபரப்பு…!

By Nanthini on கார்த்திகை 1, 2025

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவும் ஆன செங்கோட்டையன் நேற்று கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் அவசர ஆலோசனை நடைபெற்றது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி உள்ளிட்டோர் இபிஎஸ் இல்லத்தில் ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர். நள்ளிரவில் நடந்த இந்த ஆலோசனை தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.