Categories: சினிமா

அத பத்தி யோசிச்சே வாழ்க்கை போகுது.. இயக்குனர் செல்வராகவன் வெளியிட்ட வீடியோ வைரல்..!!

Spread the love

பிரபல இயக்குனரான செல்வராகவன் கடந்த 2003-ஆம் ஆண்டு ரிலீசான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலைகள் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு கடந்த 2004-ஆம் ஆண்டு 7ஜி ரெயின்போ காலனி படத்தை இயக்கினார். பின்னர் 2006-ஆம் ஆண்டு புதுப்பேட்டை படத்தை இயக்கி திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார். இப்போது தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்திலும் செல்வராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் செல்வராகவன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, காலைல எழுந்த உடனே நம்ம யோசிக்கிறது பிரச்சனைய பத்தி தான். தினமும் பிரச்சனை பற்றியே யோசிச்சிட்டு இருந்துட்டு ராத்திரி கனவில் பிரச்சனை பத்தி தான் யோசிக்கிறோம். இதுதான் எல்லாருடைய வாழ்க்கையாகவும் இருக்கு. அவன் அப்படி பண்ணி இருப்பானோ? இவன் இப்படி பண்ணி இருப்பானோ? அது இந்த மாதிரி போயிருக்குமோ எல்லாத்தையும் நினைச்சு நினைச்சு மூச்சு திணற மாதிரி பிரச்சனையை பத்தி மட்டும் தான் யோசிக்கிறோம்.

 

ஒரு சத்தியமான உண்மைய சொல்லனும்னா பிரச்சனை அப்படிங்கறது நம்ம மைண்டோட இமேஜினேஷன். நாட்கள் போக போக பிரச்சனை தானா சால்வ் ஆகிடும். அப்போ இதுவரைக்கும் மனச போட்டு அலைக்கழிக்க வைத்தது எல்லாம் வேஸ்ட் தான். பிரச்சனை முடிஞ்சு போச்சு அப்படின்னா கூட உடனே மனசு குதிச்சு வந்து அடுத்து பத்தாயிரம் பிரச்சனையை மூஞ்சில தள்ளும். இதுக்கு என்ன பண்றது? ஒண்ணுமே பண்ண முடியாது. உங்க வீட்ல பூஜை ரூம் இருக்கும். கொஞ்சம் எட்டி பூஜை ரூம பாருங்க. கடவுள் படுத்துகிட்டே உங்களை பார்த்துட்டு இருப்பார். இதெல்லாம் என் பிரச்சனை.

நான் பாத்துக்குறேன்டா போய் உன் வேலையை பாருடா அப்படின்னு அவரு டெய்லி சொல்லிட்டு தான் இருப்பார். நீங்க அதை காது கொடுத்து கேட்பதில்லை. உன்ன படைச்சுட்டு உனக்கு இந்த ரோல்ன்னு நான் போட்டு வச்சிருக்கேன். நீ எதுக்கு அனாவசியமா இது அதுன்னு மனசு போட்டு நோண்டிக்குற அப்படின்னு அவர் கத்தி கத்தி பாக்குறாரு. நம்ம கேக்குறது இல்ல. நீங்க பாட்டுக்கு மொத்த பிரச்சனையையும் அவர் தலையில் போட்டுட்டு உங்க வேலைய பாருங்க என பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

டாக்டர்… என் குழந்தைக்கு 10 நாளா இருமல்… கொஞ்சம் பாருங்க… அடுத்த வாரம் வாங்க… நியூசிலாந்தில் கதறிய இந்தியத் தாய்… இணையத்தில் வைரல் வீடியோ…!

நியூசிலாந்தில் வசித்து வரும் ஆகிருதி ஜெய்ஸ்வால் ஸ்ரீவஸ்தவா என்ற இந்தியப் பெண், தனது குழந்தை கெவித் 10 நாட்களாகத் தொடர்ந்து…

6 minutes ago

கடவுளே… நூலிழையில் தப்பிய உயிர்… சாலையில் நடந்த கொடூர விபத்து… உறைந்துபோன வாகன ஓட்டிகள்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

ஹென்னூர்-பாகலூர் சாலையில் தேங்கியுள்ள மணல் மற்றும் சேறு காரணமாக புதன்கிழமை அன்று தனது மகளின் இருசக்கர வாகனம் சறுக்கி விழுந்ததைத்…

10 minutes ago

காப்பாத்துங்க… காப்பாத்துங்க… கங்கையில் மூழ்கிய இரு மகள்கள்… காப்பாற்றக் குதித்து சிக்கிய தந்தை… ஒரே பாய்ச்சலில் 3 உயிர்களை மீட்டு… மரணத்தை வென்ற ஹீரோ… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

உத்தரப் பிரதேசத்தில் கங்கையாற்றின் கரையில் வழக்கம்போல் அமைதியாகத் தொடங்கிய ஒரு நாள், கணப்பொழுதில் பேரதிர்ச்சியாக மாறியது. ஆற்றில் இறங்கி குளித்துக்…

18 minutes ago

ஐயோ பாவம்… நடுராத்திரியில் விவசாயி கொடூரமாகக் கொலை… காவல் நிலையத்தில் மனைவி… சொன்ன அந்த அதிர்ச்சி உண்மை… கிராமத்தில் திக் திக் சம்பவம்…!

யாதாத்ரி புவனகிரி மாவட்டம், சௌதுப்பால் மண்டலம், பந்தங்கி கிராமத்தைச் சேர்ந்த ரபோலு தனய்யா என்ற விவசாயி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…

25 minutes ago

திக் திக்… கணவரின் வயிற்றை பிளந்து… குடலை எடுத்து பையில் அடைத்த கொடூர மனைவி… அரியானாவில் நடுங்க வைக்கும் சம்பவம்…!

அரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் கணவனை மனைவியே கொடூரமான முறையில் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்தேகத்திற்குரிய அந்தப்…

35 minutes ago