ஹீரோ, வில்லன், குணசித்திர நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர் நெப்போலியன். இவர் இதுவரை சினிமாவில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நெப்போலியன் இன் நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது நெப்போலியன் தனது மகனுக்காக குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன் ஜேசுதா தம்பதியினருக்கு தனுஷ் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
மூத்த மகன் தனுஷ் சிறு வயதில் இருந்தே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். தனது மகனுக்காக அமெரிக்காவில் ஒரு ராஜ்ஜியத்தையே நெப்போலியன் உருவாக்கியுள்ளார். சமீபத்தில் தான் தனுசுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அந்த நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு திருமண வேலைகளில் நெப்போலியன் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் நெப்போலியன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எனது மகன் தனுஷின் 8 வருட கனவு ஆனது. என் மகன் குஷியாக வந்து ஜப்பானின் குஷிரோ என்ற சிட்டிக்கு வந்து விட்டான்.
அவன் முகத்தில் நினைத்ததை சாதித்து விட்டோம் என்ற சந்தோஷம் தெரிகிறது. ஜப்பானுக்கு வந்து அவன் செலவு செய்யும் முதல் பணம் அங்கிருக்கும் ட்ரைபல் பீப்பிளுக்கு போக வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்த டாலரை வாங்கி கழுத்தில் மாட்டிக் கொண்டான் என நெப்போலியன் சந்தோஷமாக கூறியுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram