லிவிங்ஸ்டன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய நடிகர், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவரின் முழு பெயர் பிலிப் லிவிங்ஸ்டன் ஜோனஸ் என்பதாகும். ஆரம்பத்தில் ஜி எம் குமாருடன் இணைந்து கன்னி ராசி மற்றும் காக்கிச்சட்டை ஆகிய படங்களுக்கு திரைகதை எழுதினார் லிவிங்ஸ்டன்.
1988 ஆம் ஆண்டு பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் லிவிங்ஸ்டன். தொடர்ந்து சுந்தர புருஷன், சொல்லாமலே, விரலுக்கு ஏற்ற வீக்கம், என் புருஷன் குழந்தை மாதிரி, எங்களுக்கும் காலம் வரும் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் லிவிங்ஸ்டன்.
அந்த நேரத்தில் விஜய் அஜித் ஆகியோருக்கு இணையாக போற்றப்பட்டவர் லிவிங்ஸ்டன். வானத்தைப்போல, சாக்லேட், அற்புதம், பிரியமான தோழி, அயோத்தி போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் லிவிங்ஸ்டன். இவரது மகளான ஜோவிட்டா லிவிங்ஸ்டன் சின்னத்திரை நடிகையாக நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நேர்காணியில் கலந்து கொண்ட லிவிங்ஸ்டன் தனது மனைவி உயிரை காப்பாற்றியவரை பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் ஒரு நேரத்தில் என் மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு. உடனே ஆபரேஷன் பண்ணலான ஒரு மாசத்துல உயிர் போயிடும்னு சொன்னாங்க. பணத்துக்கு என்ன செய்யனு கவலைல இருந்தேன். அப்போ லால் சலாம் படத்துல வேலை செஞ்சிட்டு இருந்தப்போ அங்க செட்டில் சொல்லி அழுதேன். உடனே ரஜினி சார் என்ன கூப்பிட்டு என்னன்னு கேட்டாரு. நடந்தத சொன்னேன். ஆபரேஷனுக்கு எவ்வளவு செலவாகும்னு கேட்டார். 15 லட்சம் ஆகும்னு சொன்னேன். உடனே செக் போட்டு தந்துட்டாரு. இன்னைக்கு என் மனைவி உயிரோட இருக்கார்னா அதுக்கு ரஜினிகாந்த் சார் தான் காரணம். என் வீட்டு பூஜை அறையில் அவர் போட்டோ வச்சி தினமும் பூஜை பண்ணிட்டு இருக்கேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார் லிவிங்ஸ்டன்.