“இனிமே நல்லவன் வேஷம் போட முடியாது.. மொத்தத்தையும் முடிக்கப் போறேன” ட்ரம்ப் விட்ட பகீர் மிரட்டல்… நடுங்கும் ஈரான்..!!

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் ஈரானுக்கு எதிராகப் பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “இனிமேல் நல்லவன் வேடம் போட முடியாது (No more Mr. Nice Guy)” என்று குறிப்பிட்டுள்ள அவர், ஈரான் மீது மிகக்கடுமையான ராணுவ நடவடிக்கைகளை எடுக்கத் தயார் என்று கூறியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று அவர் சாடியுள்ளார்.

நாங்கள் முன்வைத்துள்ள “மிகவும் நியாயமான ஒப்பந்தத்தை” ஈரான் ஏற்க வேண்டும், தவறினால் அந்த நாட்டின் ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையங்களையும் (Power Plants) மற்றும் ஒவ்வொரு பாலங்களையும் அமெரிக்கா தரைமட்டமாக்கும் என்று ட்ரம்ப் மிரட்டியுள்ளார். கடந்த 47 ஆண்டுகளாக மற்ற அமெரிக்க அதிபர்கள் செய்யத் தவறியதை தான் செய்யப்போவதாகவும், “ஈரானின் கொலை இயந்திரத்தை” (Iran Killing Machine) முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், அமெரிக்காவின் துறைமுக முற்றுகையை நீக்கினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க முடியும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கு இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் வரும் புதன்கிழமை முடிவடைய உள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த பகீர் எச்சரிக்கை உலக நாடுகளைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

2 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

3 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

3 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago