“உன் புருஷன் வெளியூர்ல தான இருக்கான்” அந்த வார்த்தை சொல்லி என் தொடையில் கை வைப்பார்… TCS நிறுவனத்தில் அரங்கேறிய பயங்கரம்.. இளம்பெண் ஊழியரின் கண்ணீர் வாக்குமூலம்..!!

Spread the love

நாசிக்கில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS)-இல் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், சக ஊழியர்களால் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து காவல்துறையிடம் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், தான் புதிதாகத் திருமணமானவர் என்றும், பணியில் சேர்ந்தது முதலே சக ஊழியர்களான ரசா மேனன், ஷாரூக் குரேஷி மற்றும் ஆசிப் அன்சாரி ஆகியோர் தன்னைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ரசா மேனன் என்பவர் அந்தப் பெண்ணின் புடவையைப் பிடித்து இழுத்ததாகவும், ஆசிப் அன்சாரி என்பவர் பணி நேரத்தில் இருக்கையில் அமரும்போது அவரது தொடையில் கை வைப்பது, தேவையற்ற முறையில் உடலைத் தொடுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்தப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆபாசமான கேள்விகளைக் கேட்டுள்ளனர். “உனக்குத் திருமணமாகிவிட்டது, உன் கணவன் வெளியூரில் இருக்கிறான், உனது உடல் தேவைகளை நான் பூர்த்தி செய்கிறேன்” என்று ஆசிப் அன்சாரி தன்னிடம் பேசியதாக அந்தப் பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அதோடு, அந்தப் பெண்ணை “பிளேயர்” (Player) என்று பட்டப்பெயர் சூட்டி அழைத்ததோடு, அவர் “ஜீரோ ஃபிகர்” (Zero Figure) வைத்திருப்பதாகக் கூறி உடல் ரீதியான கேலிகளிலும் ஈடுபட்டுள்ளனர். மதம் சார்ந்த விமர்சனங்களையும் அவர்கள் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து நாசிக் காவல்துறையினர் சிறப்பு விசாரணை குழுவை (SIT) அமைத்து, ஒரு பெண் மேலாளர் உட்பட 8 பேரைக் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இது ஒரு தீவிரமான விஷயம் என்றும், இது “கார்ப்பரேட் ஜிஹாத்” (Corporate Jihad) போலத் தெரிவதாகவும் கவலை தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஊழியர்களை டிசிஎஸ் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளதுடன், இத்தகைய செயல்களுக்குத் தங்கள் நிறுவனத்தில் இடமில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

Soundarya

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

55 minutes ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

57 minutes ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

1 மணத்தியாலம் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

1 மணத்தியாலம் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

1 மணத்தியாலம் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago