“வேலை கிடைக்கட்டும் கல்யாணம் பண்ணிக்கலாம்”… அத்தை மகளுக்கு இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்… ஆசிரியரின் ரகசிய கல்யாணம் அம்பலம்…!!!

By Muthu Mani on சித்திரை 26, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம், கனககிரி தாலுகா கண்ணேமாரடு கிராமத்தைச் சேர்ந்த பசவராஜ் (35) என்பவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் வேலைக்குச் சேருவதற்கு முன்பே, தனது அத்தை மகளான பி.எஸ்சி பட்டதாரி பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருக்கமாகப் பழகி வந்த நிலையில், திருமண ஆசை காட்டி பசவராஜ் அந்தப் பெண்ணுடன் உடல் ரீதியான உறவு வைத்துள்ளார். இவர்களது காதலை ஏற்றுக்கொண்ட இரு வீட்டாரும், சில மாதங்களுக்கு முன்பு முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர்.

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு, பசவராஜ் தனது அத்தை மகளுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். திருமணத்தைப் பற்றி கேட்டபோது, தமக்கு ஆசிரியர் வேலை கிடைத்தவுடன் செய்துகொள்ளலாம் எனக் கூறி காலம் கடத்தியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பசவராஜுக்கு ஆசிரியர் பணி கிடைத்தும், அவர் திருமணத்தைத் தள்ளிப்போட்டே வந்துள்ளார். இந்நிலையில், நிச்சயிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றிவிட்டு, வேறொரு பெண்ணை ரகசியமாகத் திருமணம் செய்து தனிக் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

   

தனது காதலன் வேறொரு பெண்ணை மணந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த அத்தை மகள், இதுகுறித்து கனககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னைத் திருமண ஆசை காட்டி ஏமாற்றிவிட்டு, தற்போது வேறு பெண்ணுடன் வாழும் பசவராஜ் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது அத்தை மகளையே ஏமாற்றிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.