“அதிகாலை 6 மணி… தண்டவாளத்தில் படுத்திருந்த முதியவர்”… நொடிப்பொழுதில் நடந்த சம்பவம்… பதறவைக்கும் வீடியோ..!

By Nanthini on சித்திரை 26, 2026

Spread the love

நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை, ரயில்வே ஊழியர் துரிதமாகச் செயல்பட்டு மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் பரவி பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இன்று காலை சுமார் 6:00 மணியளவில், ரயில்வே கீ மேன் மீனாட்சி சுந்தரம் தண்டவாளப் பகுதியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், அவர் மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பதும், தனது மகன் தாக்கியதால் ஏற்பட்ட மனவேதனையில் தற்கொலை முடிவை எடுத்ததும் தெரியவந்தது.

சம்பவ இடத்திலேயே அந்த முதியவருக்கு ஆறுதல் கூறி, தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது என்று பக்குவமாக அறிவுரை வழங்கிய மீனாட்சி சுந்தரம், அவரை பத்திரமாக மீட்டு அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் ஒப்படைத்தார். சரியான நேரத்தில் முதியவரின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் இந்த மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு உயிரைக் காக்க அவர் காட்டிய அர்ப்பணிப்பு, அப்பகுதி மக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.