தருமபுரி மாவட்டம் வெங்கடசமுத்திரம் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோகன் – சசிகலா தம்பதியரின் மூத்த மகளை, அப்பகுதியில் உணவகம் நடத்தி வந்த அஸ்லாம் என்பவர் காதல் திருமணம் செய்திருந்தார். இந்தச் சூழலில், கடந்த 15-ஆம் தேதி திடீரெனக் காணாமல் போன சசிகலாவைத் தேடி வந்த நிலையில், வாணியம்பாடியில் உள்ள ஒரு குட்டையில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. காவல்துறையினரின் தீவிர விசாரணையில், தனது மாமியாரான சசிகலாவைச் சொந்த மருமகன் அஸ்லாமே நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டுப் படுகொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
இக்கொடூரக் கொலைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது அஸ்லாமின் பண ஆசையும், கடன் நெருக்கடியும் ஆகும். சூதாட்டப் பழக்கத்தால் பெருமளவு கடனில் சிக்கியிருந்த அஸ்லாம், மாமியார் சசிகலாவிடம் அதிக நகைகள் மற்றும் பணம் இருப்பதை அறிந்து அதனை அபகரிக்கத் திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று, மாமனாருக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொய் கூறி சசிகலாவை காரில் அழைத்துச் சென்ற அஸ்லாம், வழியில் அவரிடம் இருந்த நகைகளைக் கேட்டு மிரட்டியுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், காரின் முன் இருக்கையில் இருந்த மாமியாரை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டு, அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை அஸ்லாம் கொள்ளையடித்துள்ளார்.
கொலையை மறைப்பதற்காக, பகல் முழுவதும் சடலத்தைக் காரிலேயே மறைத்து வைத்திருந்த அஸ்லாம், பின்னர் தனது நண்பரான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பூபாலின் உதவியுடன் வாணியம்பாடியில் உள்ள கல்குவாரி குட்டையில் உடலை வீசியுள்ளார். நகைக்காக மாமியாரையே கொலை செய்துவிட்டு நாடகமாடிய அஸ்லாமை, சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மற்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் ஆகியவற்றின் மூலம் காவல்துறையினர் ஆதாரப்பூர்வமாகச் சிக்கவைத்தனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட அஸ்லாம் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த அவனது நண்பர்கள் பூபால், நவீன், ஜாகிர், சமியுல்லா ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…
வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…
சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…