குஜராத் மாநிலம் மோர்பி நகராட்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடுமையான இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்துள்ளார். அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்து, அவரது மகனின் எலும்பு மஜ்கை பொருந்துகிறதா என்பதற்கான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டனர்.
அந்த பரிசோதனையின் முடிவில், தந்தைக்கும் மகனுக்கும் மரபணு மற்றும் எலும்பு மஜ்கை சற்றும் பொருந்தவில்லை என்ற அதிர்ச்சி உண்மை வெளிவந்தது. இதனால் சந்தேகமடைந்த நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிர விசாரணை நடத்தியதில், மோர்பி நகராட்சியின் முன்னாள் பெண் கவுன்சிலரின் கணவர் நோயாளியின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அம்பலமானது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், மோர்பி நகராட்சி முன்னாள் பெண் கவுன்சிலரின் கணவர் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்த போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புற்றுநோய் மருத்துவப் பரிசோதனையின் போது வெளிவந்த இக்கொடூர சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
