“பாத்ரூம் போகணும் சார்…” உள்ளே சென்ற கைதி… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ,,,!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஆத்மகூர் மண்டலம் அமரசிந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் ரெட்டி. இவர் குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள சாஞ்சல்குடா மத்திய சிறையில் ரிமாண்ட் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அவர் எர்ரகட்டாவில் உள்ள அரசு மனநல மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக பலத்த போலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் ரெட்டி, கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் எனக் கேட்டுள்ளார். உள்ளே சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் கதவைத் திறந்து பார்த்தபோது, கழிப்பறையின் வெண்டிலேட்டர் ஜன்னல் வழியே தப்பியோடியது தெரியவந்தது.

   

ஏற்கனவே இவர் இதேபோலச் சிறையிலிருந்து தப்பியோடிய வரலாறு கொண்டவர் எனக் கூறப்படுகிறது. கைதி தப்பியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள், மருத்துவமனையைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஹைதராபாத் நகரம் முழுவதும் தப்பியோடிய கைதியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.