Categories: சினிமா

மருத்துவமனையில் 3 நாட்களாக தொடரும் சிகிச்சை… மூச்சு விடுவதற்கே சிரமப்படும் நடிகர் விஜயகாந்த்… இப்ப எப்படி இருக்காரு தெரியுமா…?

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் தனது ரசிகர்களால் ‘கேப்டன்’ என அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் 156 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் நடிகர் விஜயகாந்த். இவருடைய இடத்தை எந்த நடிகராலும் இதுவரை முடியவில்லை.

இவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனைகள் ஏராளம். தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழிகளிலும் நடிகர் விஜயகாந்த் நடித்தது கிடையாது. இவர் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.  நடிகராக மட்டுமின்றி ஒரு தலைசிறந்த அரசியல்வாதியாகவும் செயல்பட்டார். கடந்த சில வருடங்களாக உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுக் கொண்டு வருகிறார் நடிகர் விஜயகாந்த். சமீபத்தில் இவருக்கு நடந்த சிகிச்சை ஒன்றில் இவரின் கால் விரல்கள் அகற்றப்பட்டதும்  குறிப்பிடத்தக்கது.

கம்பீரமாக திரையில் பார்த்த நடிகர் விஜயகாந்தை, தற்பொழுது இந்த நிலையில் பார்க்கும் அவரது ரசிகர்கள் கண்கலங்கி வருகின்றனர். அவ்வப்பொழுது  நடிகர் விஜயகாந்த்தை திரைபிரபலங்கள் நேரில் சென்று சந்தித்தும் வருகின்றனர். இவர் அவ்வப்போது உடற்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று  வருவார். அப்படி  கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருந்ததால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு விஜயகாந்துக்கு 3ஆவது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பால் கேப்டன் விஜயகாந்துக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாகவும்,  அவருக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் இறைவனை வேண்டி வருகின்றனர்.

Begam

Recent Posts

ரோட்டைக் கடந்த ரகசிய முதலை… 8 அடி ஆழப் பள்ளத்தில் சிக்கிய திக் திக் நிமிடங்கள்…. வீடியோ வைரல்….!

மும்பையின் ஆரே மெட்ரோ காம்ப்ளக்ஸ் வளாகத்திற்குள் உள்ள மின்சாரக் குழாயில் சிக்கியிருந்த சுமார் 3 அடி 7 அங்குலம் நீளமுள்ள…

31 seconds ago

“ஜனநாயகத்திற்கே ஆபத்தா?”…. தலைமைத் தேர்தல் ஆணையர் உடனே விலக மு.க.ஸ்டாலின் கெடு…. சற்றுமுன் பரபரப்பு….!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், SIR (சிறப்பு புலனாய்வு அறிக்கை) முறையிலான…

13 minutes ago

கடலூரில் பகீர்…. மயங்கிய நிலையில் கிடந்த 3 வயது சிறுமி.. பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி… 17 வயஸு சிறுவன் செய்த கொடூரம்…!

கடலூர் மாவட்டம் துறைமுகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடிப் பள்ளிக்குச் சென்ற 3 வயது பெண் குழந்தை, வீட்டின்…

40 minutes ago

அய்யோ நீயெல்லாம் ஒரு மனுஷனா?…. தெருநாயை கோடாரியால் வெட்டி கொன்ற நபர்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், வீட்டின் முன்பாகக் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கோடாரியுடன் வந்த நபர் ஒருவர்…

43 minutes ago

“பயப்படாதீங்க பாபு”…. நேரில் சென்று கையை பிடித்து தைரியம் சொன்ன முதல்வர் விஜய்….. MGM மருத்துவமனையில் நடந்தது என்ன…?

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள எம்ஜிஎம் (MGM)…

54 minutes ago

ரூ. 70 கோடி டீலிங் தோல்வி?…. ஜெம் வீரமணி வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பிய விஐபி மகன்…. வெளியான லுக் அவுட் நோட்டீஸ்….. சற்றுமுன் பரபரப்பு….!

10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஜெம் கிரானைட்ஸ் அதிபர் R. வீரமணி உட்பட மூவரை காவல்துறையினர்…

1 மணத்தியாலம் ago