அய்யோ நீயெல்லாம் ஒரு மனுஷனா?…. தெருநாயை கோடாரியால் வெட்டி கொன்ற நபர்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், வீட்டின் முன்பாகக் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கோடாரியுடன் வந்த நபர் ஒருவர் தெருநாய்கள் மீது கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஹோமி ஜாதவ் என்பவர், கையில் கோடாரியுடன் தெருநாய்களை வெறித்தனமாக விரட்டிச் சென்றுள்ளார். அதில் ஒரு நாயைப் பிடித்துக் கோடாரியால் தொடர்ந்து தாக்கியதில், அது பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் மற்றொரு நாயையும் அவர் தாக்க முயன்ற நிலையில், அது அதிர்ஷ்டவசமாக அவரிடம் சிக்காமல் தப்பி ஓடியது.

திங்கட்கிழமை மாலை 5.15 மணியளவில் நரேந்திர அகிர்வார் என்பவர் தனது குடும்பத்தினருடன் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தபோது இந்த விபரீதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தெருநாய்களைத் தாக்கிய ஹோமி ஜாதவ், அருகில் இருந்த நரேந்திரனின் தம்பியின் மனைவி மீதும் ஆபத்தான முறையில் கோடாரியை வீசியுள்ளார். நல்லவேளையாக அவர் தாக்குதலில் சிக்காமல் உடனடியாக வீட்டிற்குள் ஓடித் தப்பினார். இதனைத் தொடர்ந்து நரேந்திரன் அந்த நபரிடம் சென்று தட்டிக் கேட்டபோது, இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளதுடன், நரேந்திரனுக்கும் ஹோமி ஜாதவ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

ஹோமி ஜாதவ் இதற்கு முன்பும் பலமுறை இதுபோன்று ஆயுதங்களுடன் அப்பகுதியில் சுற்றித் திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக நரேந்திரன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, இந்த மிருகத்தனமான செயலுக்குப் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது மற்றும் விலங்குகளைக் கொடூரமாகத் தாக்கியது தொடர்பாக ஹோமி ஜாதவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“என்ன தான் நடக்குது…?” ஒன்றும் அறியாமல் நின்ற வாலிபர்…. திடீரென வந்து சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்…. நொடியில் நடந்த சம்பவம்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் வாலட்டர்கஞ்ச் போலிஸ் எல்லைக்குட்பட்ட கணேஷ்பூர் பகுதியில், இளைஞர் ஒருவர் சாலையோரமாக அமைதியாக நின்று…

7 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட பைக்…. 4 பேர் துடிதுடித்து பலியான சோகம்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் நூ பகுதியில் அமைந்துள்ள தில்லி தர்பார் உணவகம் எதிரே, அதிவேகமாக வந்த வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும்…

19 minutes ago

ரோட்டைக் கடந்த ரகசிய முதலை… 8 அடி ஆழப் பள்ளத்தில் சிக்கிய திக் திக் நிமிடங்கள்…. வீடியோ வைரல்….!

மும்பையின் ஆரே மெட்ரோ காம்ப்ளக்ஸ் வளாகத்திற்குள் உள்ள மின்சாரக் குழாயில் சிக்கியிருந்த சுமார் 3 அடி 7 அங்குலம் நீளமுள்ள…

29 minutes ago

“ஜனநாயகத்திற்கே ஆபத்தா?”…. தலைமைத் தேர்தல் ஆணையர் உடனே விலக மு.க.ஸ்டாலின் கெடு…. சற்றுமுன் பரபரப்பு….!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், SIR (சிறப்பு புலனாய்வு அறிக்கை) முறையிலான…

41 minutes ago

கடலூரில் பகீர்…. மயங்கிய நிலையில் கிடந்த 3 வயது சிறுமி.. பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி… 17 வயஸு சிறுவன் செய்த கொடூரம்…!

கடலூர் மாவட்டம் துறைமுகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடிப் பள்ளிக்குச் சென்ற 3 வயது பெண் குழந்தை, வீட்டின்…

1 மணத்தியாலம் ago

“பயப்படாதீங்க பாபு”…. நேரில் சென்று கையை பிடித்து தைரியம் சொன்ன முதல்வர் விஜய்….. MGM மருத்துவமனையில் நடந்தது என்ன…?

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள எம்ஜிஎம் (MGM)…

1 மணத்தியாலம் ago