BREAKING: டிச.26 முதல் ரயில் கட்டணம் உயர்வு அமல்.. பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி..!!

By Soundarya on மார்கழி 21, 2025

Spread the love

ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக வரும் டிசம்பர் 26 முதல்  புதிய ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. 215 கி.மீ. தூரம் வரை சாதாரண வகுப்பில் (Ordinary Class) பயணிக்கும் பயணிகளுக்குக் கட்டண உயர்வு ஏதுமில்லை. இந்தத் தூரத்தைத் தாண்டி பயணிக்கும்போது, ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்.

215 கி.மீ-க்கு மேல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் பயணிப்பவர்களுக்குக் கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படுகிறது. உதாரணமாக, ஏசி அல்லாத வகுப்புகளில் (Non-AC) 500 கி.மீ தூரம் பயணிப்பவர்கள் தற்போதுள்ள கட்டணத்தைவிட கூடுதலாக ₹10 மட்டும் செலுத்த வேண்டியிருக்கும்.